வெண் பொங்கல் | Ven Pongal Recipe in Tamil


தேவையான  பொருட்கள் :
  •  பச்சை  அரிசி -2 கப் 
  • பாசி  பருப்பு  - 1கப் 
  • சீரகம்  - 2 ஸ்பூன்  
  • மிளகு  -2 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிது 
  • பச்சை  மிளகாய் -  2  ( கீறியது )
  • இஞ்சி  - சிறிது 
  • முந்தரி - 5 - 6
  • எ ண்ணெய்  - 3 ஸ்பூன் 
  • நெய்  - 5 ஸ்பூன் 
  • உப்பு  - தேவையான அளவு
செய்முறை :
  1. முதலில் அரிசியை  1/2 மணி  நேரம்  முன்  ஊறவைக்கவும்  .
  2. பின்னர் அரிசியை  கழுவி நீர்  வடித்து   குக்கரில்  போடவும் .
  3. அடுத்து அரிசியு டன்   பாசி  பருப்பு  சேர்த்து  8 டம்ளர்  தண்ணீர்  ஊற்றி  உப்பு  சேர்த்து மூடி வைத்து  4 - 5 விசில்  விடவும்.
  4. விசில்  வந்தவுடன்  இறக்கவும் .
  5. கடாயில்  எண்ணெய் மற்றும்  நெய்  சேர்த்து  காய்ந்தவுடன்      கறிவேப்பிலை,  பச்சை  மிளகாய்,  இஞ்சி, முந்தரி , சீரகம் ,மிளகு சேர்த்து   முந்தரி  பொன்  நிறமாக  வரும்  வரை  வறுக்கவும் .
  6. பின்னர் பொங்கலுடன் சேர்த்து  கிளறவும் .
  7. சூடான  சுவையான வெண் பொங்கல்  ரெடி .