கேஎப்சி சிக்கன் ஃப்ரை | K F C Style Chicken Fry Recipe in Tamil


தேவையான  பொருட்கள் :
  • சிக்கன்  - 1/2 கிலோ  ( 2 லெக் பீஸ் , 2 ப்ரெஸ்ட்  பீஸ் )
  • இஞ்சி  பூண்டு  விழுது  - 2 ஸ்பூன் 
  • முட்டை  -1
  • மைதா  மாவு  - 1 கப் 
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
  • மிளகு   தூள் -  1/2  ஸ்பூன் 
  • எண்ணெய் - 6  ஸ்பூன் 
  • உப்பு - தேவையான  அளவு  
  • சோயா  சார்ஸ்  - 1 ஸ்பூன் 
  • தக்காளி  சார்ஸ்  -1 ஸ்பூன்
  • சில்லி  சார்ஸ்  - 1 ஸ்பூன்  
  • ப்ரட்  தூள்  - 1.கப் 
  • உப்பு  - தேவையான அளவு 
செய்முறை :
  1. முதலில் குக்கரில் சிக்கன்  இஞ்சி பூண்டு விழுது, சோயா சார்ஸ்,  தக்காளி சார்ஸ், சில்லி சார்ஸ்,  தேவையான அளவு   உப்பு,  தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து  மூடி  வைத்து  2 -3 விசில் விடவும் .
  2. அடுத்து  ப்ரெட்டை  எடுத்து சைடு  கட்  செய்து  மிக்சியில்  போட்டு  தண்ணீர்  இல்லாமல்  அரைத்து கொள்ளவும் .
  3. ஒரு  பாத்திரத்தில்  முட்டை,  மைதா மாவு ,மிளகு  தூள் ,  மஞ்சள் தூள் தண்ணீர்  சேர்த்து  பஜ்ஜி  மாவு  பதத்திற்கு  கலக்கவும் .
  4.  சிக்கன் வெந்தவுடன்  எடுத்து  மாவில் நனைத்து  ப்ரெட் தூள்ல தொட்டு  எண்ணெய்யில்  பொறித்து   எடுக்கவும்.
  5. கேஎப்சி சிக்கன் ஃப்ரை ரெடி .