வாழை பூ வடை | Banana Flower Vadai Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • வாழை பூ -1 ( இரண்டு கை  அளவு )
  • கடலை  பருப்பு  - 1/2 கப் 
  • துவரம் பருப்பு  -1 ஸ்பூன் 
  • பச்சை  மிளகாய்  - 3-4 (நறுக்கியது )
  • இஞ்சி   - சிறிது 
  • தண்ணீர் - தேவையான  அளவு 
  • கறிவேபில்லை  -   சிறிது  
  • எண்ணெய்  - பொறிக்க   தேவையான  அளவு 
  • பெருங்காயம்  - 1/4   ஸ்பூன் 
  • பெருஞ்சீரகம் - 1/4   ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை :
  1. முதலில் கடலை  பருப்பு ,  துவரம் பருப்பு   இரண்டையும்  3 மணி  நேரம்  ஊறவைக்க  வேண்டும் .
  2. வாழை பூவை  சுத்தம் செய்து  மோர்ரில்  நனைத்து  பின்னர்  சிறிது  சிறிதாக  நறுக்கிகொள்ளவும்  .
  3. ஊறவைத்த  பருப்பை  நீர் வடித்து  அதில்  பச்சை  மிளகாய் ,  இஞ்சி,  பெருங்காயம் ,  பெருஞ்சீரகம் , உப்பு தேவையான அளவு சேர்த்து  தண்ணீர் இல்லாமல்  அரைக்கவும் 
  4. பருப்பு  பாதி  அரைந்தவுடன்  அதில்   வாழை பூவை  சேர்த்து   அரைக்கவும் 
  5. பின்னர்   அரைத்தா பருப்பை  ஒரு பத்திரத்தில்  எ டுத்து  அத்துடன் நறுக்கிய  வெங்காயம் ,  கறிவேபில்லை   சேர்த்து   நன்றாக  கலக்கவும் .
  6. கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எழுமிச்சை  பழம்  அளவு  பருப்பை எ டுத்து  உருட்டி  பின்னர்  ஒரு  வாழை இலையில்  எண்ணெய்   தடவி  வடை  தட்டி  போடவும் .
  7. வடை  பொன்  நிறமாக  வந்தவுடன்  எடுக்கவும்.
  8. சூடான  சுவையான   வாழை பூ  வடை  தயார் . தேங்காய்  சட்டினியுடன்  சுவைக்கவும் .