தேவையான பொருட்கள் :
- ரவை - 1/2 கப்
- சர்க்கரை - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- உப்பு - 1 சிட்டிகை
- கேசரி பவுடர் - 2 சிட்டிகை
- நெய் - 4 ஸ்பூன்
- முந்திரி - 7
- ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் காடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- அதே நெய் காடாயில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை மிதமான தீயில் பொன் நிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- காடாயில் 2 கப் தண்ணீர் , 1 சிட்டிகை உப்பு , 2 சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டி இல்லாமல் கிளரவும். 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
- இப்பொழுது சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளரவும். நெய், ஏலக்காய் பவுடர் சேர்த்து கிளரவும்.
- அகலமான பாத்திரத்தில் சிறுது நெய் தடவி கேசரியை கொட்டாவும். முந்திரியை தூவி பரிமாறவும்.