தேவையானபொருட்கள் :
- பெரிய வெங்காயம் - 2 பெரியது ( பொடியாக நறுக்கியது )
- பூண்டு - 8-10
- கடலை பருப்பு - 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் -3-4
- கடுகு - 1/2 ஸ்பூன்
- புளி கரைசல் - 1 ஸ்பூன்
- கறிவேபில்லை - 10
- எண்ணெய் -2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- முதலில் கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், பூண்டு , கடலை பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், புளி கரைசல் , உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
- பின்னர் இவைகளை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேபில்லை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து கலக்கவும்.
- வெங்காய சட்னி தயார் , இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும் .