ரவா உப்புமா | Rava Uppuma Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • ரவை - 1 கப் 
  • தண்ணீர் - 2  1/2 கப் 
  • கடுகு - 1 ஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு - 1 ஸ்பூன் 
  • பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது 
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - சிறு துண்டு 
  • கறிவேபில்லை - சிறுது 
  • எண்ணெய் - 2 ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை :
  1. முதலில் கடாயில் ரவையை கொட்டி  4-5 நிமிடம்  மிதமான  தீயில்  நன்றாக  வறுக்கவும் .
  2. பின்னர்   ரவையை வேறு  பாத்திரத்தில் மாற்றிவிடவும் .
  3. அதே கடாயில்  2ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்த்வுடன்  கடுகு,உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு  போடவும் .
  4. கடுகு பொரிந்தவுடன் கறிவேபில்லை நறுக்கிய வெங்காயம்  பச்சை மிளகாய்   நறுக்கிய இஞ்சி  போட்டு  நன்றாக  வதக்கவும் .
  5. பின்னர்  நன்றாக  வதக்கியவுடன்   தண்ணீர் ஊற்றி   சிறிதளவு  உப்பு  சேர்த்து  நன்றாக  கலக்கவும்.
  6. தண்ணீர் 5 நிமிடம் கொதித்தவுடன்  வறுத்த  ரவயை  சிறிது சிறிதாக  கொட்டி  கட்டி  இல்லாமல்  5  நிமிடம்  கிளரவும் .
  7. ரவா உப்புமா தயார் சூடாக  பரிமாறவும்