பள்ளிபாளையம் சிக்கன் | Pallipalayam Chicken Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • நாட்டு கோழி  - 1/2 கிலோ 
  • சின்ன வெங்காயம்  -500 கிராம் 
  • காய்ந்த மிளகாய்  -15
  • மஞ்சள்   தூள்    -1/2  ஸ்பூன்
  • பூண்டு  -250 கிராம் 
  • தேங்காய்  பல்  -7-8  பீஸ் 
  • கறிவேபில்லை -10  இலை 
  • கடுகு  கடலை  பருப்பு  -1/2  ஸ்பூன்
  • எண்ணெய் -5   ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை :
  1. முதலில்  கடாயில்  2 ஸ்பூன்   எண்ணெய்  ஊற்றி   காய்ந்ததும் கடுகு   கடலை பருப்பு போட்டு கடுகு  பொறிய்ந்தவுடன்    கறிவேபில்லை  சேர்க்கவும் .
  2. பின்னர்  நறுக்கிய  வெங்காயம்   அறைத்த  பூண்டு  சேர்த்து வதக்கவும் .
  3. காய்ந்த மிளகாயை  கில்லி  அத்துடன்  சேர்த்து  கிளறவும் , இவை அனைத்தும்  தண்ணீர்  இல்லாமல்  வதக்கவும் .
  4. கோழியை  கழுவி மஞ்சள்  தடவி  ஊறவைக்கவும் .
  5. பின்னர் சிறு துண்டுகளாக  நறுக்கிய   நாட்டு கோழியை  சேர்த்து   தேவையான அளவு  உப்பு போட்டு  நன்றாக  கிளறவும்  கறியில்  இருந்து  தண்ணீர்  விடும்  பின்னர்  மூடி  வைக்க வேண்டும் .
  6. சிக்கன்  வேகும்வரை  தீயை  மிதமாக வைக்கவும் .
  7. சிக்கன்   வெந்தவுடன்   நறுக்கிய  தேங்காய்  பீஸ் சேர்த்து   இறக்கவும் .
  8. பள்ளிபாளையம்  சிக்கன்  ரெடி  கொத்தமல்லி தூவி   பரிமாறவும் .