தேவையான பொருட்கள்:
- தக்காளி - 2 ( நறுக்கியது )
- பெரிய வெங்காயம் - 3 ( நறுக்கியது )
- வர மிளகாய் - 2 -3
- புளி - கோலிகுண்டு அளவு
- கடுகு , உளுந்து - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் -2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- முதலில் மிக்ஸ்சியில் தக்காளி, வர மிளகாய், வெங்காயம், புளி உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அடுத்து தளிக்கும் கரண்டியில் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு , உளுந்து கறிவேப்பிலை சேர்த்து தளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும் .
- கார சட்னி ரெடி இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும் .