தேவையான பொருட்கள் :
- கேரட் , பீன்ஸ் - 1 கப்
- முட்டகோஸ் , உருளை கிழங்கு - 1/2 கப்
- பட்டாணி - 1/2 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- தேங்காய் - 1/2 மூடி
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1.1/2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பட்டை - 1
- லவங்கம் - 3
- கசகசா - 1 ஸ்பூன்
- பொதினா இலை - சிறிது
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறி மசால் தூள் -1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- முந்தரி - 5 - 6
- பச்சை மிளகாய் - 2
- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தாவுடன் பட்டை, சோம்பு, லவங்கம், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிவைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- மிக்ஸ்யில் தேங்காய், கசகசா, மஞ்சள் தூள், கறி மசால் தூள், முந்தரி, பொதினா இலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும் .
- அரை பதம் காய் வெந்தயுடன் அரைத்தா மசாலை சேர்த்து கொதிக்கவவிடவும்.
- சப்பாத்தி குருமா ரெடி.