தேவையான பொருட்கள் :
- மட்டன் - 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- தேங்காய் - 1/2 மூடி
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1.1/2 ஸ்பூன்
- மல்லி தூள் - 1. 1/2 ஸ்பூன்
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
- கறி மசால் தூள் -1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- முதலில் குக்கரில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
- பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் .
- நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியவுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், கறி மசால் தூள் சேர்த்து வதக்கவும் .
- அடுத்து மட்டன் சேர்த்து கிளரவும்.
- பின்னர் உப்பு தேவையான அளவு சேர்த்து கிளரவும்.
- மட்டன் மூழுகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 6 விசில்வந்தவுடன் இறக்கிவிடவும்.
- மிக்ஸியில் தேக்காய் கசகசா சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் .
- பின்னர் விசில் அடங்கியாவுடன் அரைத்த மசாலை மட்டனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
- மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும் .