தேவையான பொருள்கள் :
- சிக்கன் துண்டு - 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் - 200 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
- தக்காளி -200 கிராம்
- கருப்பு மிளகு - 4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
- தனியா தூள் - 1 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் -3
- தேங்காய் பால் - 1/2 மூடி ( கெட்டியான பால் )
- கறிவேபில்லை -10 இலை
- கொத்தமல்லி இலை - சிறிது
- எண்ணெய் -1/4 கப்
- உப்பு - தேவையான அளவு
- முதலில் மிளகை பவுடராக அரைத்து கொள்ளவும் .
- கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் கறிவேபில்லை போட்டு பொறிந்ததவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வரும்வரரை வதக்கவும் .
- பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் .
- பின்னர் பச்சை மிளகாய் , சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும் 5 நிமிடம் கழித்து நிறம் மாறியவுடன் மஞ்சள் தூள், தனியா தூள் , மிளகாய் தூள் ,மிளகு தூள் , உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வதக்கவும் .
- பின்னர் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் மேல வரும்வரரை கொதிக்க விடவும்.
- செட்டிநாடு பெப்பர் சிக்கன் தயார் கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும் .