தேவையான பொருட்கள் :
- உருளை கிழங்கு - 1/4 கிலோ ( வேகவைத்து )
- பெரிய வெங்காயம் - 1 ( நறுக்கியது)
- தக்காளி - 2 ( நறுக்கியது)
- அரிசி மாவு - 3 ஸ்பூன்
- மைதா மாவு - 3 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1.1/2 ஸ்பூன்
- மல்லி தூள் - 1. 1/2 ஸ்பூன்
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
- புளி கரைசல் - கோழிக்குண்டு அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 6 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- முதலில் ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் , மிளகு தூள், புளி கரைசல், தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிகொள்ளவும்.
- அடுத்து வேகவைத்த உருளை கிழங்யையும் அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து கையில் கலக்கிகொள்ளவும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கலக்கி வைத்த உருளை கிழங்யை பொன் நிறமாக வறுத்து கொள்ளவும் .
- அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை வெங்காயம், தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் .
- பொறித்து வைத்த உருளை கிழங்யை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- சூடான சுவையான உருளை கிழங்கு மஞ்சூரியன் ஃப்ரை ரெடி .