தேவையான பொருள்கள் :
- ரவை - 1 கப்
- சர்க்கரை -3/4 கப் ( அல்லது )1 கப்
- ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன்
- நெய் -3- 4 ஸ்பூன்
- முந்திரி - 10
- உலர்ந்த திராட்சை -10
- முதலில்காடாயில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை மிதமான தீயில் பொன் நிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் சர்க்கரையை பவுடராக அரைத்து கொள்ளவும் .
- காடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு , உலர்ந்த திராட்சையை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் ரவைவுடன் சர்க்கரை,முந்திரி பருப்பு , உலர்ந்த திராட்சை நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டி முந்திரி பருப்பால் அலங்கரித்து பரிமாறவும்