வெஜிடபுள் புலாவ் | Vegetable Pulao Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • பாஸ்மதி  அரிசி  -1/2 கப் 
  • தண்ணீர்  - 1 கப் 
  • கேரட் , பீன்ஸ் ,  பச்சை பட்டானி , உருளைக் கிழங்கு  - 1 கப் ( பொடியாக  நறுக்கியது )
  • பச்சை  மிளகாய் -2
  • இஞ்சி  பூண்டு  விழுது - 1 ஸ்பூன் 
  • பெரிய வெங்காயம்  -1   (நறுக்கியது )
  • ஏலக்காய்  -  2
  • நெய் -3 ஸ்பூன்
  • முந்திரி -10 (நெய்யீல் வறுத்தது)
  • எண்ணெய் -3  ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • சோம்பு  - 1/2  ஸ்பூன்
  • பிரியாணி   இலை   - சிறியது 
  • கிராம்பு  -2
  • இலவங்கப்பட்டை  -  சிறியது
  • கொத்தமல்லி இலை - சிறிது 
செய்முறை :
  1. முதலில்   பாஸ்மதி  அரிசியை  கழுவி  பின்னர்  30 நிமிடம்  தண்ணீரில்  ஊரவைக்கவேண்டும் .
  2. காய்கறிகளை  கழுவி  சிறு சிறு  துண்டுகளாக  நறுக்கிகொள்ள வேண்டும்.
  3. காடாயில்   எண்ணெய்  ஊற்றி  காய்ந்ததும்  சோம்பு ,  இலவங்கப்பட்டை,  கிராம்பு,  பிரியாணி   இலை ,  ஏலக்காய்  போடவும் .
  4. பின்னர்  இஞ்சி  பூண்டு  விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் , பின்னர் நறுக்கிய  வெங்காயத்தை  சேர்க்கவும் .
  5. வெங்காயம்  வதங்கியவுடன்  நறுக்கிய  காய்கறிகளை  சேர்த்து  நன்றாக    கிளறி விடவும் பின்னர் உப்பு சேர்த்து  5 நிமிடம்  காய் வனங்கும்  வறை  விடவும் .
  6. பின்னர் ஊர வைத்த  அரசியை  வடித்து   குக்கரில்   1 கப்  தண்ணீர்  விட்டு   வதக்கிய  காய்கறிகளை    சேர்த்து 1 விசில்  வந்தவுடன்  இறக்கவும் .
  7. கொத்தமல்லி இலை தூவி  கிளறி விடவும்  .
  8. சூடான  சுவையான  வெஜிடபுள்  புலாவ்  தயார் .