சாம்பார் சாதம் | Sambar Sadam Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • அரசி  - 1/2 கப் 
  • தண்ணீர்  - 2.5 கப்ஸ் 
  • துவரம்பருப்பு  -1/3 கப் 
  • புளி  -  நெல்லிக்காய்  அளவு 
  • எண்ணெய் -1-2    ஸ்பூன்
  • சாம்பார் பவுடர்  - 1/2  ஸ்பூன்
  • வெல்லம் -  2 சிட்டிகை 
 வறுக்க  தேவையான  பொருட்கள் :
  • கொத்தமல்லி  - 2  ஸ்பூன்
  • வெந்தயம்  -1/2     ஸ்பூன்
  •  கல்லபருப்பு   -1    ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்  - 6-8 ( தேவைக்கு )
  • பெருங்காயம்  -1 சிட்டிகை 
  • இலவங்கப்பட்டை -  1 சிறிது 
  • கிராம்பு  - 2
  • தேங்காய்  துருவியது  -1  ஸ்பூன்
  • மஞ்சள்  தூள்   - 1/2  ஸ்பூன்
தாளிக்க  தேவையான  பொருட்கள் 
  • கடுகு  - 1/4 ஸ்பூன்
  • சீரகம்  -1/4  ஸ்பூன்
  • சின்னவெங்காயம்  - 1/4 கப் 
  • பச்சை  மிளகாய் -1
  • கறிவேபில்லை- 10  இலை 
  • எண்ணெய்  - 2  ஸ்பூன்
  • முந்திரி - 10
  • கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை : 
  1. முதலில்  குக்கரில்  அரிசியய்  போட்டு  தேவையான அளவு  தண்ணீர்  ஊற்றி  2-3 வீசில்  வந்ததும்  இறக்கவும் .
  2. பின்னர்  வேறு  குக்கரில்   துவரம்பருப்பை போட்டு  தண்ணீர் ஊற்றி  1   ஸ்பூன்   எண்ணெய் ,  மஞ்சள் தூள்,  உப்பு   சேர்த்து  2  வீசில் வந்ததும்  இறக்கவும் .
  3. புளியை  தண்ணீரில்  ஊறவைக்க  வேண்டும்  
  4. கடாயில்  1 ஸ்பூன்  எண்ணெய்  காய்ந்தவுடன்   வறுக்க  தேவையான  பொருட்களை   ஒன்னு ஒன்னாக   வறுத்து  பவுடராக  அரைத்துகொள்ளவும் .
  5. பின்னர்  கடாயில்  1 ஸ்பூன்  எண்ணெய்  காய்ந்தவுடன்   சின்னவெங்காயம், உப்பு ,  பச்சை  மிளகாய்  புளி கரைசல்  சேர்த்து  பின்னர் நறுக்கிய  காய்கறிகளை  போட்டு  வேகவைக்க  வேண்டும் .
  6. பருப்பில்  வதக்கிய  காய்   அரைத்த  மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து  இறக்கவும் .
  7. பின்னர்  தளிக்கும்  கரண்டியில்   எண்ணெய்  காய்ந்தவுடன்  கடுகு  காய்ந்த மிளகாய்  பெருங்காயம்  சேர்த்து  தாளித்து  சம்பரில்  கொட்டவும் 
  8. அடுத்து சாதத்தில்  சாம்பாரை  ஊற்றி    கிளறி விடவும்   கொத்தமல்லி இலை  தூவி இறக்கவும் .
  9. சாம்பார் சாதம்  தயார்  சூடாக  பரிமாறவும் .