புதினா சட்னி |Pudina (Mint) Chutney Recipe for Dosa/Idli in Tamil


தேவையான  பொருட்கள் :
  • பொதினா  இலை - 1 கட் 
  • கொத்தமல்லி  இலை  - 1/2 கட் 
  • கடலை  பருப்பு  - 2 ஸ்பூன் 
  • குண்டு  உளுந்து  - 2 ஸ்பூன் 
  • வர மிளகாய்  - 5
  • பச்சை  மிளகாய் - 1
  • தேங்காய் - 1/4 மூடி
  • புளி  - கோலிகுண்டு  அளவு 
  • பெருங்காயம்  - 1 சிட்டிகை 
  • எண்ணெய் - 3 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை  - 10    
  • உப்பு - தேவையான  அளவு
செய்முறை:
  1.  முதலில்  கடாயில்  எண்ணெய் ஊற்றி  காய்ந்தவுடன்   கடலை  பருப்பு  குண்டு உளுந்து வர மிளகாய்  பச்சை மிளகாய், புளி சேர்த்து பொன்  நிறமாக  வறுத்துக்கொள்ளவும்.
  2. பின்னர் கடாயில்1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  காய்ந்தவுடன்   பொதினா  இலை கொத்தமல்லி  இலை  சேர்த்து  வதக்கவும்.
  3. அடுத்து  வறுத்துவைத்த  அனைத்தையும் , வதக்கிய பொதினா இலை கொத்தமல்லி  இலையையும்  தேங்காய்யும்  சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  4. தாளிக்கும்  கரண்டியில் எண்ணெய் ஊற்றி  காய்ந்தவுடன்  கடுகு   கறிவேப்பிலை  பெருங்காயம் சேர்த்து  தாளித்து  அரைத்தா சட்னியில் சேர்த்து கலக்கவும்  உப்பு  தேவையான  அளவு  சேர்த்து  கொள்ளவும் .
  5.  சுவையான  சட்னி ரெடி  இட்லி  அல்லது  தோசையுடன்  பரிமாறவும் .