முருங்கை காய் சாம்பார் | Murungai Kai (DrumStick) Sambar Recipe in Tamil


தேவையானா  பொருட்கள் :
  • முருங்கை  காய் -  2
  • துவரம் பருப்பு  - 1 கப் 
  • தக்காளி - 2 ( நறுக்கியது )
  • சின்ன  வெங்காயம் - 15 ( நறுக்கியது )
  • புளி - எழுமிச்சை பழம்  அளவு 
  • மிளகாய் தூள்  - 1  ஸ்பூன் 
  • சாம்பார்  பொடி - 1  ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் -1/2   ஸ்பூன் 
  • பெருங்காயம்  1 சிட்டிகை 
  • கடுகு , உளுந்து  - 1 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை  - சிறிது 
  • விளகெணெய்  1 ஸ்பூன் 
  • எ ண் ணெய்  - 2  ஸ்பூன் 
  • உப்பு -  தேவையான  அளவு

செய்முறை :
  1. முதலில் பருப்பை கழுவி குக்கரில்  போட்டு  ஒரு  கப்  பருப்பிற்கு  3 கப்   தண்ணீர்  ஊற்றி   மஞ்சள் தூள் , விளக்கெணெய் சேர்த்து  மூடி  வைத்து  5 விசில்  விடவும் 
  2. பருப்புவெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுதுக்கொள்ளவும் 
  3. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்தவுடன்   கடுகு , உளுந்து , கறிவேப்பிலை, சின்ன  வெங்காயம் போட்டு  வதக்கவும் .
  4. அடுத்து  தக்காளி, முருங்கை  காய்,  மஞ்சள் தூள்,  மிளகாய் தூள் ,சாம்பார்  பொடி சேர்த்து  3 நிமிடம்  வதக்கவும் .பின்னர் காய் முழுகும்  வரை  தண்ணீர்  ஊற்றி  வேகவைக்கவும்.
  5. அடுத்து  வேகவைத்த   பருப்பை  சேர்த்து  கலக்கவும்  உப்பு  தேவையான  அளவு  சேர்த்து  கொதிக்கவிடவும் .
  6. பின்னர்  புளி  கரைசலை  சேர்த்து   கொதிக்கவிடவும்.
  7. சுவையான  முருங்கை  காய்  சாம்பார்  தயார்.